சென்னை: தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல 10 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தேர்வுத்துறை இணை இயக்குநரே கொரோனா பாதிப்புக்கு ஆளான பிறகும் அரசு விடாப்பிடியாக நிற்கிறது. கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று உயர்நீதிமன்றத்தில் சொல்லும் தமிழக அரசுக்கு, மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களின் உயிரைப் பற்றி கவலையில்லையா? கொரோனா விவகாரத்தில் நிர்வாகத் திறனில்லாமல் ஆரம்பம் முதலே தவறு மேல் தவறுகளைச் செய்து நோயைக் கட்டுப்படுவதில் தோற்றுப்போய் நிற்கிறது அரசு. இவ்வளவு ஆபத்திற்கு இடையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி இன்னொரு மோசமான தவறைச் செய்து பெரும் பழிக்கு ஆளாகிவிடக்கூடாது எனவும் கூறினார்.