அரசு பொதுத்தேர்வுகளுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு-மேல்நிலை முதலாமாண்டு - இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கொரோனா வைரஸ் நோய் தொற்றை பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது.   இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு-மேல்நிலை முதலாமாண்டு - இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான பணிகளை மேற்கொள்ள உள்ள ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெறும் வகையிலும். ஆசிரியர்கள் முன்னேற்பாட்டு பணிகளை செயல்படுத்தும் பொருட்டும் நேற்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து பயணம் செய்ய ஏதுவாக பின்வரும் வழித்தடங்களில் பேருந்தினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது ஜூன் 24ம் தேதி வரை  நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.வழித்தடங்கள்:காஞ்சிபுரம், உத்திரமேரூர், மானாம்பதி, சாலவாக்கம், செங்கல்பட்டு, பெரும்புதூர், திருப்புட்குழி, தாம்பரம், தக்கோலம், அரக்கோணம், ராணிப்பேட்டை, நெய்யாடுபாக்கம், கோயம்பேடு, திருவள்ளூர், பேரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், அமரம்பேடு, வடபழனி, மதுரமங்கலம், பூந்தமல்லி, சோமங்கலம், பிராட்வே, ஒரகடம், காவேரிப்பாக்கம், வெம்பாக்கம், அய்யன்பேட்டை, புத்தகரம், ஆனம்பாக்கம், படூர், வாலாஜாபாத், தாம்பரம்,  சுங்குவார்சத்திரம், நல்லூர், குன்றத்தூர் மற்றும் மப்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் -ஆசிரியர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள அனைத்து வழித்தடங்களில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: