ஊரடங்கால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு!!

டெல்லி : மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக மாநில அரசுகள், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதல் 2020ம் ஆண்டு டபிப்ரவரி வரையிலான 3 மாதங்களுக்கு ரூ.36,400 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

பொது முடக்கத்தால் வருவாய் இழப்பை சந்தித்துள்ள மாநில அரசுகளின் செலவீனங்களை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு முதல் 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என்று மத்திய அரசு கூறி இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 96 கோடி ரூபாயை ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: