பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகள் செல்போனில் வாட்ஸ்அப் இருக்கவேண்டும்: நீதிபதிகள் கருத்து

மதுரை: மதுரை மாவட்டம், நரசிங்கம்பட்டி குரூப் வெள்ளரிக் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தவமணி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், மேலூர் தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர், ‘‘எனது செல்ேபானில் வாட்ஸ் அப் வசதி இல்ைல. நீதிபதிகளுடன் செல்போனில் பேச பயமாக உள்ளது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘அதிகாரிகளின் செல்போனில் வாட்ஸ் அப் வசதி இருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும். மடியில் கனமிருந்தால் தான் பயம் இருக்கும். அதிகாரிகள் பயமின்றி பணியாற்ற வேண்டும்’’ என்றனர்.

பின்னர், மனுவிற்கு தாசில்தார் தரப்பில் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிபதிகள், ‘‘கொரோனா காலத்தில் வழக்குகளில் ஹைடெக் முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாமதமின்றி தீர்வு காணவே விரும்புகிறோம். மனுதாரர் போன், இமெயில் விவரம் மற்றும் அதிகாரிகள் விவரத்தைவைத்திருக்க வேண்டும். தேவையான நேரம் அவர்களை தொடர்பு கொள்ளலாம். தேவையின்றி நீதிமன்றத்திற்கு வருவது தவிர்க்கப்படும்’’ என்றனர். 

Related Stories: