சீர்காழி பகுதியில் ரூ.64 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள்: சிறப்பு அதிகாரி ஆய்வு

சீர்காழி: சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை தமிழ்நாடு நீர் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது. சீர்காழி அருகே, திருவெண்காடு கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கார வடிகால் சட்ரஸ் மறுகட்டுமான பணிகளையும், திருவெண்காடு கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தென்பாதி வாய்க்கால் தலைப்பு மதகு மற்றும் தென்பாதி கடைமடை சட்ரஸ் மறுகட்டுமானம் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார். அப்போது நாகை கலெக்டர் பிரவீன் பி நாயர், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.தீபனா விஸ்வேஸ்வரி, செயற்பொறியாளர் (காவிரி வடிநில கோட்டம்) ஆசைத்தம்பி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: