சமூக நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் இடஒதுக்கீட்டை பெற உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகம் எப்பொழுதுமே சமூகநீதியை காப்பதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.  அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படும் விவரம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும், அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் ஒப்படைக்கும் இடங்களை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு  50 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும், அதுபோலவே பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான  இடஒதுக்கீட்டையும், மாநில அரசுகள் வழங்கும் விகிதாச்சாரத்தின்படி இடஒதுக்கீடு பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

Advertising
Advertising

 இதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் உ.பலராமன் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் சமூக நீதிக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக் ெகாள்கிறேன்.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: