சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சிறு,குறு நிறுவனங்களின் வரையறை மாற்றி அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு,குறு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோநோன் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஏற்கனவே விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்து இதில் ஆலோசனனை நடத்தப்பட்டது.

Advertising
Advertising

இந்த நிலையில் ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது, 2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது;

* சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுகுறு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிட உதவும்.

* சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு.

* விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும்.

* ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல்.

* மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட பயிர்களுக்கான  குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு

* குறு நிறுவனங்களின் நிதி வரையறை ரூ.25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்வு

* 2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் அறிவிப்பு

* குறு நிறுவனங்களின் நிதி வரையறை 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்வு

* ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்வோருக்கு பயனளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

* சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவியில் 7% வரை வட்டி தள்ளுபடி என்றும் கடனுதவி வழங்குவதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவார்கள்.

Related Stories: