புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்; ஜூன் 8 முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்; முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி; ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், பார்சல், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது.

 நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் சில தளர்வுகளை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது;

* ஜூன் 8-ம் தேதி முதல் வணிகவளாகங்கள் இயங்கலாம்

* ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி

* ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்

* புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்

* மத்திய அரசு வழிகாட்டுதலுடன் மதவழிபாட்டு தளங்கள் ஜூன் 8-ம் தேதி முதல் திறக்கப்படும்

* புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், பார்சல், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது.

மேலும் புதுச்சேரி வழியே தமிழக பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>