தனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் வர வேண்டிய நிலுவை 3 கோடி: சர்வேயில் தகவல்

புதுடெல்லி: ஒவ்வொரு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கும் (எம்எஸ்எம்இ) 2 கோடி முதல் 3 கோடி வரை நிலுைவயில் இருப்பதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.  கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டது குறு, சிறு, நடுத்தர தொழில்கள்தான். ஏற்கெனவே பணதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார மந்த நிலையால் கடும் பாதிப்பை அடைந்துள்ள இந்த தொழில்துறைக்கு, கொரோனா பேரியாக அமைந்து விட்டது. இந்த தொழில்களுக்கு மத்திய அரசு நிறுவனங்கள் வழங்க வேண்டிய பாக்கி 5 லட்சம் கோடி என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Advertising
Advertising

இந்த பாக்கி தொகையை 45 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களையே ஆதாரமாக நம்பியுள்ளன. இந்நிலையில், எம்சிசிஐஏ என்ற அமைப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை தொடர்பாக சர்வே எடுத்தது. இதில் ஒவ்வொரு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கும் (எம்எஸ்எம்இ) 2 கோடி முதல் 3 கோடி நிலுைவயில் உள்ளது. தற்போது 13 சதவீத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இக்கள்) மட்டும், தங்கள் உற்பத்தி திறனில் 50 சதவீதத்துக்கு மேல் இயக்குகின்றன.

கடன் வழங்குவதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளபோதும். 69 சதவீத நிறுவனங்களிடம் பணப்புழக்கமே இல்லை. தொழில் நடத்த போதுமான நிதி இல்லாததே மிக முக்கிய பிரச்னையாக உள்ளது.  கடன் உதவி  விரைவாக கிடைப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, பொருட்கள் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் போதுமான அளவு இல்லை. இது போன்ற பல்வேறு காரணங்களால், இந்த தொழில் நிறுவனங்கள் இயங்குவதே போராட்டமாக உள்ளது என சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: