தமிழகத்தில் 5 மாவட்டத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் முடிந்து பல்வேறு இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. அதில் கன்னியாகுமரியில் 40 மிமீ மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை, எட்டயபுரம் 30மிமீ, சூளகிரி 20மிமீ, ஒகேனக்கல், மணிமுத்தாறு, தாளவாடி 10 மிமீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாகவும், அரபிக் கடல் பகுதியில் உருவாகி வரும் காற்றழுத்தம் காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதே நேரத்தில் தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய திருத்தணியில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

இதற்கிடையே, தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் இன்றோ அல்லது நாளையோ காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் நாளை  முதல் ஜூன் 5ம் தேதி வரை மீனவர்கள் அரபிக் கடலின் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Stories: