தமிழகத்தில் நேரடியாக முதலீடு செய்ய ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி. உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி. உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து நிறுவனத் தலைவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  நாடு முழுவதும் நாளை மறுதினத்துடன் 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மேலும் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். பல நிறுவனங்களுடன் ஏற்கனவே ரூ.15,128 கோடியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் சாதகமான அம்சங்களை குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி கடிதத்தை அனுப்பியுள்ளார். மேலும் நிறுவனங்களில் தேவைக்கேற்ப ஊக்க சலுகைகைளை அரசு வழங்கிடும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: