108 ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம்; நாகர்கோவிலில் விபத்தில் சிக்கிய வாலிபர்: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

நாகர்கோவில்: கொரோனா ஊரடங்கு தளர்வுகளால் குமரி சாலைகளில் அதிக வாகனங்கள் செல்கிறது. இதனால் நகர பகுதிகளில் வாகன நெருக்கம் இருந்து வருகிறது. இயல்பு வாழ்க்கையின்போது இயங்குவதுபோல் வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று மதியம் வடசேரியில் இருந்து மணிமேடையை நோக்கி திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒரு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். வாலிபர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

பைக்கில் வடசேரி மீன்மார்கெட் அருகே செல்லும் போது, பஸ் நிலைய பகுதியில் இருந்து வடசேரி அண்ணாசிலைக்கு ெசல்ல ஒரு பைக் வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தல் அந்த பைக், திருச்சி வாலிபர் சென்ற பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. மோதிய வேகத்தில் திருச்சி வாலிபரின் வலது கால் முறிந்தது. இதனால் நிலை தடுமாறியவர் சாலையில் விழுந்தார். உடனே அந்த பகுதியில் நின்ற வாலிபர்கள் விபத்தில் சிக்கியவரை தூக்கி சாலையோரம் கொண்டு வந்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் முதலில் போன் இணைப்பு கிடைக்கவில்லை. பின்னர் கிடைத்தபோது சரியான பதில் தெரிவிக்க வில்ைல. இந்த நிலையில் வடசேரியில் இருந்து மணிமேடைநோக்கி ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. இதனை பார்த்த வாலிபர்கள் அந்த ஆம்புலன்சை நிறுத்துமாறு கூறினர். வேகமாக வந்த ஆம்புலன்சின் வேகம் குறைந்தது. பின்னர் ஆம்புலன்சில் இருந்தவர் ஆம்புலன்சில் விபத்தில் சிக்கிய ஒருவர் இருப்பதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து வேகமாக சென்றது.

 அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசாரும், அந்த வாலிபர்களும் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மறித்து, விபத்தில் சிக்கியவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வடசேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: