கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி: சிறைப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்..!

கடலூர்: கடலூர் மத்திய சிறைச்சாலையில் 2 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று என்பது அனைத்து தரப்பினரையும் பாரபட்சம் இல்லாமல் பரவி வருகிறது. குறிப்பாக பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மருத்துவர்கள் செவிலியர்கள், ஊடகத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் அனா அனைத்து பிதரப்பினருக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் சிறைக்கைதிகளுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்பாக கடலூர் மத்திய சிறையில் இருந்து 2 ஆயுள் தண்டனை கைதிகள் 2 பேர் பயிற்சிக்காக பபுழல் சிறைக்கு ஊரடங்குக்கு முன்பு வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடலூர் மத்திய சிறைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் புழல் சிறைக்கு வந்த அந்த 2 கைதிகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை தனிமை படுத்தும் முயற்சியில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அந்த கைதிகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு பரிசோதனை தொடங்கப்பட உள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: