சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறந்த ஹாக்கி வீரர்: பத்மஸ்ரீ பல்பீர் சிங் சீனியர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்...!

சண்டிகர்: இந்திய ஹாக்கியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் சீனியர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இரஙகல் தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணறல் மற்றும் அதிக காய்ச்சல் காரணமாக கடந்த 12-ம் தேதி இந்திய ஹாக்கியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்பீர் சிங் மே 18 முதல் அரை கோமாட்டோஸ் நிலையிலிருந்தார். மேலும் அதிக காய்ச்சலுடன் மூச்சுக்குழாய் நிமோனியா நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டது.

அதிக காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சையின் போது மூன்று மாரடைப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்த 96 வயதான பல்பீர் சிங் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 6.30 மணிக்கு காலமானார். 95 வயதான பல்பீர் சிங் இந்தியாவிற்காக ஹாக்கி விளையாட்டில் பல்வேறு சாதனை நிகழ்த்தியுள்ளார். லண்டனில் (1948), ஹெல்சிங்கி (1952) துணைக் கேப்டனாகவும், மெல்போர்ன் (1956) கேப்டனாகவும் இந்திய அணிக்கு தங்கப்பதக்கத்தை பல்பீர் சிங் வென்று கொடுத்துள்ளார்.

நவீன ஒலிம்பிக் வரலாற்றில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தேர்ந்தெடுத்த 16 லெஜண்ட்டுகளில் நாட்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் தேர்வு செய்யப்பட்டவர். 1957ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1952 ஹெல்சின்கி விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் போட்டியில், நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதில் ஐந்து கோல்களை பல்பீர் சிங் அடித்திருந்தார். இவர் அடித்த ஐந்து கோலை இன்று வரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அவர் மறையும் வரை அந்த சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்பீர் சிங்கின் மறைவுக்கு ஹாக்கி வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுக்களை சேர்ந்த வீரர்களும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்:

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பத்மஸ்ரீ பல்பீர் சிங் சீனியர் ஜி அவரது மறக்கமுடியாத விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக நினைவுகூரப்படுவார். அவர் வீட்டிற்கு நிறைய பெருமை மற்றும் விருதுகள் கொண்டு வந்தார். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறந்த ஹாக்கி வீரர், அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் ஒரு அடையாளத்தை வெளிப்படுத்தினார். அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: