ராஜபாளையம் அருகே தொடர்மழையால் நிரம்பியது சாஸ்தா கோயில் அணைக்கட்டு: தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாஸ்தா கோயில் அணை நிரம்பியுள்ளது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த  மழையின் காரணமாக அடிவார பகுதியின் சாஸ்தா கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சாஸ்தா கோயில் வனப்பகுதியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலும் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சாஸ்தா கோயில் ஆற்றில் இருந்து சாஸ்தா கோயில் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் அதிகளவில் வருவதால் நீர்தேக்கத்தின் முழு கொள்ளளவு 36 அடி நிரம்பியுள்ளது.

இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வறண்டுள்ள  கண்மாய்களுக்கு நீர்வரத்து செல்வதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: