ஸ்டார் டிவியில் இன்று விசுவநாதன் ஆனந்த்

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ஸ்டார் டிவியின் ‘மைண்ட் மாஸ்டர்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் மனவலிமையின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனலில் இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். கொரோனா தொற்று பீதி காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு  நிலவுகையில், ஆனந்த் இப்போது ஜெர்மனியில் தங்கியிருக்கிறார். சமீபத்தில் அவர் பிரதமர் நல நிதிக்காக ஆன்லைன் மூலம் செஸ் விளையாடி நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: