சென்னையில் 33 வார்டுகளில் கொரோனா பாதிப்பு சவாலாக உள்ளது; கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது. இதிலும் சென்னையில் மட்டும் -- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா நிலவரம் தொடர்பாக கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், மாநகராட்சி ஆணையர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது; கொரோனாவால் இருப்போர் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க முயற்சி செய்து வருகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் 3791 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்துள்ளனர். சென்னையில் குடிசைப்பகுதிகள் 1970 இடங்கள் கண்டறியப்பட்டு நோய்தடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையின் 3 மண்டலங்களில் நோய்த் தாக்கம் குறைந்து வருகிறது. சென்னையில் ஆரம்ப சுகாதாரங்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் பட்டியல் உள்ளது. சென்னையில் 33 வார்டுகளில் கொரோனா பாதிப்பு சவாலாக உள்ளது. ராயபுரம், கோயம்படு உள்ளிட்ட இடங்கள் சவாலாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி. சென்னையில் 1,500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>