எதுவுமே செய்யாமல் பாத்திரத்தை வைத்தால்போதும்.. தானாகவே பால் கறக்கும் அதிசய பசு மாடு : ஆச்சிரியத்தில் கடலூர் மக்கள்!!

கடலூர் : கடலூரில் உள்ள ஒரு பசு மாடு எதுவுமே செய்யாமல் தானாகவே பால் கறக்கும் அதிசயச் செயலை செய்து வருகிறது.கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் தனது வீட்டில் சில பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு ஒரு பசு கன்று ஈன்றுள்ளது. அன்று முதல் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இந்தப் பசுவின் மடியின் அருகில் பாத்திரத்தை வைத்தால்போதும் தானாகவே ஒரு லிட்டர் வரை பால் கறந்துவிடுகிறது. இந்தப் பசுவின் அதிசயச் செயலைக் கண்டு அக்கம் பக்கத்தினர் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தப் பசுவின் ஒரு காம்பில் குட்டி கன்று பால் குடித்துக் கொண்டிருந்தாலும் அதன் மற்றொரு காம்பில் பாத்திரத்தைக் காட்டினால் உடனே அதில் பால் சுரக்கிறது. இந்த அதிசயத்தை ஆச்சரியம் பொங்கப் பலரும் கண்டு வியந்து வருகின்றனர். அதே சமயம் மடியின் அருகே உள்ள பாத்திரத்தை எடுத்துவிட்டால் பசு கறப்பதைப் பசு நிறுத்திவிடுகிறது. பசு மடியில் சென்சார் எதுவும் உள்ளதா என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.பால் சுரக்கும் காம்பு பலவீனமாக இருந்தால் அதன் துளை திறந்தபடியே இருக்கும். எனவே இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: