மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : கட்சி நிர்வாகிகள் மீது ஜனநாயக விரோத கைதுகள் குறித்து விவாதம்

சென்னை : சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டு பதித்து போலீசார் கைது செய்வதால் நாளை காலை 10 மணிக்கு தனது தலைமையில் ஆலோசனை என ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன.இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன், ஆர்.எஸ் பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.எஸ் பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கொ.ம.தே.கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 

இந்த நிலையில், திமுக மாவட்டச் செயலளார்கள், நாடாளுமனற் உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது முதலமைச்சர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலில் பொய் வழக்குகள் புனைவது, சட்ட விரோத , ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>