ரசிகர்கள் இல்லாத கால்பந்து விளையாட்டு; பார்வையாளர்களாக ‘செக்ஸ்’ பொம்மைகள்: மன்னிப்பு கேட்டது தென்கொரியா அணி

சியோல்: ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடந்த கால்பந்து விளையாட்டு போட்டியில், பார்வையாளராக செக்ஸ் பொம்மைகள் வைக்கப்பட்ட விவகாரத்தில் தென்கொரியா அணி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் உலகெங்கும் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தென் கொரியாவில் கால்பந்து போட்டி நடந்தது. தென்கொரியாவின் தொழில்முறை கால்பந்து அணியான எஃப்.சி. சியோல், ரசிகர்கள் அனுமதியின்றி மூடிய கதவுகளுக்கு பின்னால் போட்டியை நடத்தியது.

நடப்பு சாம்பியனான ஜியோன்புக் மோட்டார்ஸ், தென்மேற்கு நகரமான ஜியோன்ஜூவில் சுவான் ப்ளூவிங்ஸை  1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கிட்டத்தட்ட 40,000 பேர் அமரக்கூடிய வசதிபடைத்த அரங்கத்தில் ரசிகர்கள் யாரும்  அனுமதிக்கப்படுவதில்லை. அதனால், போட்டியின் ஏற்பாட்டாளர்கள் விளையாட்டு அரங்கத்தை நிரப்ப பாலியல் பொம்மைகளான மேனிக்வின்களைப் பயன்படுத்தினர். அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், கே-லீக் கால்பந்து கிளப் மீது சமூக ஊடகங்களில் கண்டபடி திட்டித் தீர்த்தனர்.

அதனால் கடும் பின்னடைவை எதிர்கொண்ட கே-லீக் போட்டி ஏற்பாட்டாளர்கள் இவ்விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரினர். தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகும் படங்களை பார்த்தால், அதில் கால்பந்து வீரர்களை பாராட்டும்படியும், வெற்றிச் சின்னங்களை காட்டும்படியும் வடிவமைக்கப்பட்ட பல செக்ஸ் பொம்மைகள் ஸ்டேடியத்தில் நிற்கவைத்தும், அமரவைத்தும் உள்ளனர் என்பது தொியவந்தது.

Related Stories: