தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைத்த அரசு: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி மறுப்பு...!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். கொரோனா தொற்று பரவலை குறைத்து காட்டவே பரிசோதனைகளை குறைத்து விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி தமிழ்நாட்டில் 13,281 பேருக்கு பரிசோதனை செய்ததில் 771 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மே 13-ம் தேதி தமிழகம் முழுவதும் 12,660 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. 12,600 பேரை பரிசோதனை செய்ததில் 509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் பரிசோதனையை குறைத்தது ஏன்? என மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி மறுப்பு;

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் சராசரியாக நாளொன்றுக்கு 4,000 பரிசோதனைகள் நடத்தப்படுவதாக கூறினார். பரிசோதனை மையங்களுக்கு வரும் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவ நிபுணர் குழு அறிவுறுத்தல்;

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் கொரோனா தொற்று பரிசோதையை குறைக்க கூடாது என மருத்துவ நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. எந்தெந்த இடங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது என்பதை கண்டறிய பரிசோதனை உதவுகிறது. இப்போது இருப்பதை விட கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதே அவசியம்; கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டவர்களை மருத்துவமனையில் உடனே சேர்ப்பது அவசியம். யார் மூலமாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பதை கண்டறிவது அவசியம்.

கொரோனா தொற்றுக்கு காரணமானவர்களை கண்டறியும் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்துள்ளது. நோய்த் தொற்று அதிகரிப்பதைக் கண்டு பதற்றம் அடைய தேவையில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: