55 நாட்களாக டெல்லி விமான நிலையத்திலேயே வசித்து வந்த ஜெர்மன் பயணி இன்று நாடு திரும்பினார்

டெல்லி: இந்தியாவில் விமானச்சேவை நிறுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் டெல்லி விமான நிலையத்திலேயே ஜெர்மன் பயணி ஒருவர் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்கள் அவர்களின் நாட்டிற்குத் திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே பலரும் அவர்களின் சொந்த நாட்டிற்கு மீட்பு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்திலேயே வசித்து வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த எட்கார்ட் ஜீபார்ட், இன்று காலை கே.எல்.எம் ஏர்லைன்ஸ் நிவாரண விமானத்தின் மூலம் ஆம்ஸ்டர்டாமிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதிகாலை 3 மணிக்கு 291 பயணிகளுடன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஜீபார்ட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்றுக்காகச் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் ஆரோக்கியமாக இருப்பது கண்டறியப்பட்டது.

ஜீபார்ட் வழங்கி இருந்த சுய அறிக்கை படிவத்தில் 3 டி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமே தான், இந்தியாவில் தங்கியிருந்த இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ட்கார்ட் ஜீபார்ட் கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த விமான நிலையத்தில் வசித்து வந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

Related Stories: