அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை: மத்திய அமைச்சர்களுக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கும்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி இங்குள்ள அவர்களின் பெற் றோர்களும், இப்போதுள்ள நோய்த்தொற்று பிரச்னை காரணமாக  மிகுந்த கவலையுடன் உள்ளனர். அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்தும், அவர்களின் பெற்றோர் மட்டும் குடும்பத் தார்களிடமிருந்து எனக்கு ஏராளமான வேண்டுகோள் கள் வந்தவண்ணம் உள்ளன. நியூயார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து இந்திய மாணவர்கள் மற்றும் மென் பொருள் வல்லுநர்கள் தங்களின் பாதுகாப்பு குறித் தும், இந்தியா திரும்புவது குறித்தும் பெரும் கவலையு டன் உள்ளனர்.

அவர்களின் பெரும்பா லோர் தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் என்பதும், நான் அங்கிருந்து தான் அவர்க ளின் பிரதிநிதியாக மக்கள வைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன் என்பதும் குறிப் பிடத்தக்கது. தற்போதைய துரதிருஷ் டமான நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் பிரச் சினைகளை மனிதாபிமான முறையில் பரிசீலிக்க வேண்டும். இவைகளை கருத்தில் கொண்டு சென்னைக்கு இரண்டாம் கட்டமாக விமானம் இயக்கும் போது, அமெரிக்காவில் பல்வேறு பகுதிகல் உள்ளவர்களை யும் அழைத்து வந்து, அந்த விமானத்தில் கொண்டு சேர்க்கவும் அல்லது மும்பை, டெல்லி வழியாக நியூயார்க், நியூஜெர்ஸி ஆகிய இடங் களில் இருந்து விமானங் களை இயக்க நடவடிக்கை  எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: