கொரோனா ஊரடங்கு, கொளுத்தும் வெயிலால், கொடைக்கானல் ‘வெறிச்’

கொடைக்கானல்: கொரோனா ஊரடங்காலும், கொளுத்தும் வெயிலாலும் கொடைக்கானலில் நகர் மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கியவுடன் நகரில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்து இல்லாமல், சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லை. மேலும், கடந்த சில நாட்களாக வெயிலும் கொளுத்தி வருகிறது. நேற்று காலை முதல் நகரில் வெயில் கொளுத்தியது.

இதனால் பகல் வேளையில் உள்ளூர்வாசிகளின் நடமாட்டமும் இல்லை. கடந்த 2 நாட்களாக கோடைமழை இல்லாத காரணத்தால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா ஊரடங்கு, கோடை வெயிலின் தாக்கம் ஆகிய காரணங்களால் கொடைக்கானலில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

Related Stories: