சென்னை :சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 676 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 743 பேர் குணம் அடைந்துள்ளனர். 3050 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 62.34% ஆண்கள், 37.63% பெண்கள் ஆவர்.