ஆலந்தூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தாவான சாண்டா கிளாஸ் உடை அணிந்த ஒருவருடன் பாடகர் குழுவினர் வீடுவீடாக சென்று கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி இசைத்தபடி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவது வழக்கம். அதன்படி பரங்கிமலையில் உள்ள மலையாள கத்தோலிக்க கிறிஸ்தவ சபையினர் நேற்று முன்தினம் இரவு பரங்கிமலை ஆலந்தூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இல்லங்களுக்கு பாடகர் குழுவினருடன் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் பரங்கிமலை காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாடகர் குழுவினர் அங்கு இரவு பணியில் இருந்த ஆய்வாளர் பாலன் மற்றும் காவலர்களுக்கு பாடகர் குழுவினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் காவலர்களின் அனுமதியோடு, காவல் நிலையத்திலேயே இயேசு கிறிஸ்து பிறப்பின் பாடல்களை இசையுடன் ஆடியும், பாடியும் காண்பித்தனர். இதை போலீசார் கண்டு ரசித்தனர். பின்னர் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்தவர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
The post பரங்கிமலை காவல்நிலையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் appeared first on Dinakaran.