முதுகுவலி என வந்தவருக்கு உடலில் 3 கிட்னிகள் இருப்பது கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் உறைந்த மருத்துவர்கள்!

பிரேசில்  : முதுகுவலியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பிரேசில் நபரின் உடலை ஸ்கேனில் 3 கிட்னிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான ஒருவர், நீண்ட நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவர்களை பார்க்க சென்ற போது அவரின் உடல் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டுள்ளது. ஸ்கேனின் முடிவில் அவருக்கு சகஜமான முதுகுவலி தான் என தெரியவந்தபோதும், மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தனர். அது அந்த நோயாளிக்கு 3 கிட்னிகள் இருப்பது தெரியவந்ததால்தான். அவரின் இடது புறம் ஒரு கிட்னியும் வலது புறம் 2 கிட்னியும் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவர்கள் தகூறுகையில், நமது உடலில் இரண்டு கிட்னிகள் சிறிய குழாய் வழியாக சிறுநீரக பையை அடையும். ஆனால் அவருக்கு இருக்கும் 3 கிட்னிகளும் எந்த குழாய் வழியாகவும் இல்லாமல் நேராக சிறுநீரக பையில் சேர்ந்துள்ளதுஅவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் அனைத்து உறுப்புகளும் நன்றாகவே செயல்பட்டு வருகின்றது. இது போன்ற நிகழ்வுகள் கரு வளர்ச்சியின் போது தான் நடக்கும், என மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதுகு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு மூன்று கிட்னி இருப்பது தெரிய வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: