தர்மபுரி மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடைகளில் காலாவதி பீர் விற்பனை: அதிகாரிகள் நேரில் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில்  3 டாஸ்மாக் கடைகளில்,  காலாவதியான பீர் விற்பனை செய்யப்பட்டதால் மது பிரியர்கள்  அதிர்ச்சியடைந்தனர். தர்மபுரி மாவட்டம் முழுவதும், 65 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. ஊரடங்கின் காரணமாக  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கடைகளில் இருந்த மதுபானங்கள், திருமண மண்டபம்  மற்றும் குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில், 44 நாட்களுக்கு  பிறகு நேற்று முன்தினம், டாஸ்மாக் கடைகள்  திறக்கப்பட்டன. நேற்று முன்தினம்,  ஒரே நாளில் ₹3.70 கோடிக்கு மது விற்பனை ஆனது. தொடர்ந்து   2வது நாளான நேற்று மதுவிற்பனை சூடுபிடித்தது. இந்நிலையில், நேற்று பாப்பாரப்பட்டியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் காலாவதியான  பீர் விற்பனை செய்யப்பட்டது.  

கடந்த 26.04.2020ம் தேதியுடன் பீர்  காலாவதியான பீர் பாட்டில்களை விற்பனை  செய்ததால் அதிர்ச்சியடைந்த குடிமகன்கள்,  கடை விற்பனையாளர்களிடம் புகார் தெரிவித்தனர். ஒருசிலர் வாங்கிய பீர் பாட்டிலை, மீண்டும் கடைகளில்  கொடுத்துவிட்டு சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் கேசவன்  மற்றும் அதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட  டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். காலாவதியான பீர்  பாட்டில்களை விற்க வேண்டாம் என அறிவுறுத்தினர். மேலும்,  காலாவதியான பீர் பாட்டில்களை கொண்டு சென்ற கடைகளின்  விற்பனையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பீர் விற்பனையை உடனே  நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தினர்.

Related Stories: