குன்னூர் அருகே மர்மமான முறையில் விலங்குகள் உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

குன்னூ:   குன்னூர் அருகே வள்ளுவர் நகர் பகுதியில் மர்மமான முறையில் நாய்கள், பூனைகள், காட்டுப் பன்றி, காகங்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஒட்டுப்பட்டரை பகுதியில் குன்னூர் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இப்பகுதியை சுற்றி வசம் பள்ளம், வாசுகி நகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள நாய், பூனை, பன்றி போன்றவை குப்பை கிடங்கில் கிடைக்கும் உணவுப் பொருட்களை தினமும் உண்டு வருகின்றன.

இந்நிலையில் வள்ளுவர் நகரில் நேற்று நாய்கள், காகங்கள், பூனை ஆகியவை திடீரென கீழே விழுந்து உயிரிழந்தன. அருகில் முட்புதரில் காட்டு பன்றியும் இறந்ததை மக்கள் கண்டனர். அதிர்ச்சியடைந்த மக்கள் கால்நடை துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு சென்ற மண்டல கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் வேடியப்பன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்தனர். விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்து, மாதிரிகளை எடுத்தனர். அதனை தொடர்ந்து சுற்றுப்புற பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: