காவல் துறையில் புதிதாக தேர்வாகி பரங்கிமலை பயிற்சி பள்ளிக்கு வந்த 8 பெண் காவலர்களுக்கு கொரோனா

சென்னை:  தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக 8,538 பேர் தேர்வாகினர். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் புதிதாக தேர்வான காவலர்களுக்கு பயிற்சி அளித்து உடனே பணியில் ஈடுபடுத்த தமிழக காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி கரண் சின்கா, புதிதாக தேர்வான அனைவரும் மாவட்ட கண்காணிப்பு மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அப்படி பயிற்சி வகுப்புக்கு வரும் காவலர்கள் அனைவரும் சளி மற்றும காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகுதான் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், தமிழகம் முழுவதும் புதிதாக தேர்வான 7,538 பேர் அவர்களுக்கு வந்த குறுஞ்செய்தி அடிப்படையில் பயிற்சி வகுப்புக்கு வந்தனர். குறிப்பாக, சென்னை பரங்கிமலை பயிற்சி பள்ளிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ேடார் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் வந்தனர். அவர்களில் கடந்த 3ம் தேதி பயிற்சிக்கு வந்தவர்களிடம் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து சம்பந்தப்பட்ட 8 பெண் காவலர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Stories: