கொரோனாவை வென்ற ஹாரிபாட்டர் எழுத்தாளர்: 9 கோடி நிதி

பிரபல இங்கிலாந்து எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங். இவரது ஹாரிபாட்டர் கதைகள் பல பாகங்களாக திரைப்படமாகியுள்ளது. இதன் மூலம் அவர் கோடீஸ்வரி ஆனார். உலகில் அதிகம் சம்பாதிக்கும் எழுத்தாளர் இவர். கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தனது குடும்ப டாக்டர் அறிவுரையின் பேரில் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். பின்னர் நோயில் இருந்து விடுபட்டார். இந்த நிலையில் கொரோனா தொற்றின் கொடுமையை அனுபவித்து அறிந்த அவர் கொரோனா நோயாளிகளுக்காக 1.2 மில்லியன் டாலர் (9 கோடி) நிதி வழங்கி உள்ளார். இந்த நிதியை கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்களுக்கு வழங்குமாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Stories: