திம்பம் மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் லங்கூர் இன குரங்குகள்

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் லங்கூர் இன குரங்குகள் உணவுக்காக வாகனங்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அரியவகை இனமான  லங்கூர் இன குரங்குகள் வசித்து வருகின்றன. தமிழகம் - கர்நாடக மாநிலத்தை  இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த  வனப்பகுதியில் உள்ள திம்பம் மலைப்பாதையில் லங்கூர் குரங்குகள் நடமாட்டம்  உள்ளது. நீண்ட வால் மற்றும் கரிய முகத்துடன் இந்த குரங்குகள் பார்ப்பதற்கு  மிகவும் அழகாக இருக்கும். திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள்  லங்கூர் குரங்குகளுக்கு காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவு  பொருட்கள் கொடுத்துச் செல்வதால், மலைப்பாதையில் குரங்குகள் சாலையோரம் வாகன  ஓட்டிகள் உணவு தருவார்களா என காத்திருப்பது வழக்கம்.

தற்போது ஊரடங்கு  உத்தரவு காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்து வெகுவாக  குறைந்துள்ளதால் லங்கூர் குரங்குகள் மலைப்பாதையில் அமர்ந்துகொண்டு வாகன  ஓட்டிகள் தின்பண்டங்கள் தருவார்களா? எதிர்பார்த்தபடி காத்திருக்கின்றன. மேலும் குட்டிகளுடன் தாய் குரங்குகள் உணவுக்காக சாலையோர தடுப்புச் சுவரில்  அமர்ந்தபடி  சாலையில் செல்லும் வாகனங்களை எதிர்பார்த்தவாறு காத்துள்ளன.மலைப்பாதையில் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என  வனத்துறையினர் எச்சரித்து வரும் நிலையில் லங்கூர் குரங்குகளுக்கு வாகன  ஓட்டிகள் உணவு அளித்து பழகி விட்டதால் தற்போது குரங்குகள் மலைப்பாதையில்  முகாமிட்டுள்ளன.

Related Stories: