கொரோனாவால் நாடே திணறி வரும் நிலையில், ரூ.922 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தேவையா? : குடியரசு துணை தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்

டெல்லி : கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் நாடே திணறும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அவசரம் காட்டுவதா என்று மத்திய அரசை காங்கிரஸ் சாடியுள்ளது.தலைநகர் டெல்லியின் இதய பகுதியில் குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரை 3 கிமீ வரையிலான இடங்களை மறு நிர்மாணம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். புதிய நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகம், பிரதமர் இல்லம் ஆகியவற்றை சுமார் ரூ. 20,000 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மட்டும் 1000 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு இடையே கடந்த 23ம் தேதியன்று கூடிய மத்திய அரசின் உயர்மட்ட குழு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான சுற்று சூழல் அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் அவசியமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டும் செலவில் கொரோனா சிகிச்சைக்காக 16 லட்சம் வென்டிலேட்டர்களை வாங்கிவிடலாம் என்பது காங்கிரசின் நிலைப்பாடு. ஆகவே மத்திய அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. புதிய கட்டிடம் திட்டமிடப்பட்ட போது திட்ட மதிப்பீடு 776 கோடி என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது 922 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: