கணக்கியல் கடன் தள்ளுபடி மக்கள் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகம்: இந்தியக் கம்யூனிஸ்ட் முத்தரசன் அறிக்கை

சென்னை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளிகளான மெகுல் சோக்சி, விஜய் மல்லையா, யோகி ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உள்ளிட்ட 50 பேர்கள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள கடன் தொகையில் ரூபாய் 68 ஆயிரத்து 607 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் மத்திய நிதியமைச்சரின் விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியான தகவல்படி கடன்களை கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்கும் நடவடிக்கை கை விடப்படவில்லை என்று விளக்கியுள்ளார். மக்கள் ‘காதில் பூ சுற்றும்‘ வேலை என்பதை நன்கு அறிவார்கள்.கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் இதுவரை எவ்வளவு, யார் யார் அல்லது எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து பாஜ அரசு வசூலித்து இருக்கிறது என்பதை நிதியமைச்சர் வெளிடுவாரா?. பாஜ மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

Related Stories: