திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்று பாலத்தை மூடினால் கொரோனா தொற்றை தவிர்க்கலாம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் நகரத்தில் மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சியரின் உத்தரவின்படி ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்று பாலம் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையை திருவெண்ணெய்நல்லூர் வருவாய் துறையினர் மூடி அங்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்களை தினந்தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக பணியமர்த்தி வருகின்றனர். இதில் பாலத்தின் ஒருபுறம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவிலும், மறு புறம் விழுப்புரம் தாலுகாவிலும் உள்ளதால் தற்போது ஒரு புறம் மட்டும் மூடப்பட்டு, விழுப்புரம் தாலுகா பகுதியில் உள்ள மறுபுறம் திறந்து கிடக்கிறது.

இதில் விழுப்புரத்திலிருந்து திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கு வருபவர்கள் அங்கு பணியமர்த்தியுள்ள வருவாய்த்துறையினரிடம் தினந்தோறும் கடும் வாக்குவாதம் செய்து வருகின்றனர். பாலத்தின் மறுமுனை பகுதியான விழுப்புரம் வட்டம் மரகதபுரம் கிராம எல்லை மூடப்பட்டதால் பொதுமக்கள் விழுப்புரம் நகரத்திற்கு சென்று வருவதை எளிதில் தடுக்கலாம் என்றும் கொரோனா தொற்றிலிருந்தும் மக்களை பாதுகாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அதிரடியாக பாலத்தின் மறுமுனையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories: