சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மெடிக்கல், கேன் வாட்டர் கடைகளுக்கு சீல் வைப்பு

பெரம்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மிக அத்தியாவசிய பொருட்களான மருந்தகங்கள், தண்ணீர் கேன் உள்ளிட்ட சில கடைகள் மட்டும் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.  திருவிக நகர் 6வது மண்டலத்துக்கு உட்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 25வது தெருவில் உள்ள மருந்தகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் வந்து செல்வதாகவும்  மருந்தகத்தில் உள்ளவர்கள் முககவசம் அணிவதில்லை எனவும் தொடர் குற்றச்சாட்டுகள் வந்தன.  இதேபோல், பெரம்பூர் பாக்சன் தெருவில் உள்ள தண்ணீர் கேன் கடையில் 20க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி இருப்பதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, திருவிக நகர் 6வது மண்டல அதிகாரி நாராயணன் உத்தரவின்பேரில் உதவி வருவாய் அலுவலர் லட்சுமணகுமார் மற்றும் உரிமம் ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நேரில் சென்று கடைகளை மூடி சீல் வைத்தனர்.

Related Stories: