கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்க கால் கொலுசை தானம் செய்த பெண்

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்க ஒரு ஏழைப்ெபண் தனது கால் கொலுசை தானம் செய்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொண்ணேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் கவிபிரியா (22). இவருக்கு தாய் இல்லை. தந்தை மட்டும் உள்ளார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், அருகில் உள்ள மில் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அன்னூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்களுக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் (நோய் எதிர்ப்பு சக்தி பானம்) விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை பார்த்த கவிபிரியா, தனது பங்களிப்பாக ஏதேனும் ெசய்ய வேண்டும் என விரும்பினார். அதன்படி, தனது தந்தையின் அனுமதி பெற்று, தனது கால் கொலுசு இரண்டையும் கழற்றிக்கொடுத்தார்.

அது, 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டு, ஏழை மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதைப்பார்த்து, கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து கவிபிரியா கூறுகையில், “மக்கள் கொரோனா பிடியில் இருந்து மீள வேண்டும், மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என மனதில் தோன்றியது. அதனால், எனது கொலுசுகள் இரண்டையும் தானமாக கொடுத்து விட்டேன். இது, எனக்கு மனநிறைவு அளிக்கிறது’’ என்றார்.

Related Stories: