முதல் நிலை கள பணியாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையா?

கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் பணியில் தன்னலம் கருதாது மருத்துவர்களும் செவிலியர்களும் சுகாதார பணியாளர்களும் உழைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த சமூகம் எந்த மரியாதையையும் தராமல் இருக்கிறது என்பதுதான் அவலம். கொரோனா பாதித்து இறந்த மருத்துவர்களின் இறுதிச்சடங்கை கூட கண்ணியமான முறையில் நடத்த முடியாத நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது. இதுவரை மூன்று மருத்துவர்களின் உடல் அடக்கம், தகனத்தை சமூக விரோதிகள் தடுத்து நிறுத்தி, அலைக்கழித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தாங்கவொண்ணா மனஉளைச்சலையும் வேதனையையும் கொடுத்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை புதைத்தாலோ, எரித்தாலோ காற்றின் மூலம் நோய்த்தொற்று பரவாது. இந்த விழிப்புணர்வு இல்லாததால்தான் கொஞ்சமும் ஈவிரக்கம், நாகரிகம் இல்லாமல் சில கும்பல் இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடுகிறது. எனவே மக்களிடம் தகுந்த விழிப்புணர்வூட்ட அரசு தவறிவிட்டதோ என எண்ண வேண்டியிருக்கிறது.

இதுகுறித்து பல மட்டங்களில் கடும் கண்டனங்கள் வெளிவரத் தொடங்கியதை அடுத்து இப்போதுதான் தமிழக அரசு, உடல் அடக்கத்தை தடுப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. எனினும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முதல் நிலை களப்பணியாளர்களுக்கு மாநிலத்தில் இன்னும் பாதுகாப்பற்ற நிலைதான் உள்ளது என்ற அச்சம் பரவியிருக்கிறது. இந் நிலை குறித்து களப்பணியாற்றும் துறைசார்ந்த ஆளுமைகளின் நான்கு கோணங்கள் இங்கே

Related Stories: