செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 58 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென ஆய்வு  மேற்கொண்டார். அப்போது கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டார். மேலும், கொரோனா தடுப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து டீன் சாந்தி மலரிடம் கொரோனா தடுப்பு சிகிச்சை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.பின்பு அங்கு தயார் நிலையில் உள்ள 450 படுக்கை வசதிகளை பார்வையிட்டார்.

Related Stories: