6 திட்டங்களை மூடியது பிராங்ளின் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா?: அபாயத்தில் மியூச்சுவல் பண்ட்கள்

புதுடெல்லி:  பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், பல்வேறு மியூச்சுவல் பண்ட் திட்டங்களை செயல்படுத்தி வந்தது. வரவேற்பு மிகுந்த இந்த திட்டங்களில், முதலீட்டாளர்கள் பலர் பணத்தை போட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில், தான் நடத்தி வந்த 6 திட்டங்களை மூடுவதாக, கடந்த 23ம் தேதி பிராங்ளின் நிறுவனம் திடீர் அறிவிப்பு வெளியிட்டது. இது முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மூடப்பட்ட 6 திட்டங்களிலும், கடந்த 2018 ஆகஸ்ட் இறுதியில் இருந்த முதலீட்டு தொகை ₹47,658 கோடி. ஆனால், கடந்த மார்ச் மாத இறுதி வரை இதில் ₹16,804 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த முதலீட்டு மதிப்பு 19 மாதங்களிலேயே ₹30,854 கோடியாக குறைந்து விட்டது.

இந்த மாதத்தில் மட்டும் கடந்த 20ம் தேதிக்குள் ₹4,075 கோடி இழப்பு ஏற்பட்டது. இதன்படி தற்போதைய முதலீட்டு மதிப்பு ₹26,779. அதாவது ஏறக்குறைய ₹20,000 கோடிக்கு மேல் இழப்பு நேர்ந்துள்ளது. மேற்கண்ட திட்டங்களில் முதலீடு முதிர்வடைய 5 ஆண்டுகள் வரை உள்ளது. முதலீடு எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறது அல்லது  முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது பற்றி தெளிவான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. எனவே, முதலீடு செய்த பணம் கிடைக்குமா என்ற தவிப்பு முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிராங்ளின் மட்டுமின்றி, பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தள்ளாட்டத்தில்தான் உள்ளன என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் பிரச்னைக்கு தீர்வு காண ரிசர்வ் வங்கியின் தலையீடு அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: