ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த சாலையோர வியாபாரிகள்: வருமானம் இல்லாமல் பரிதவிப்பு

மூணாறு: மூணாறில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சாலையோர வியாபாரிகள் வாழ்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது. வியாபாரம் மூடங்கியதால் வியாபாரிகளின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் உணவு இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். கேரளா அரசு தங்களுக்கு நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனாவால் மூணாறில் மக்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர் சாலையோர வியாபாரிகள் ஊரடங்கு உத்தரவு மூலம் வியாபாரங்கள் மூடங்கியதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்ய வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் .ஒவ்வெரு நாளும் சாலையோரங்களில் விற்பனை செய்வது மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

தற்போது கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மூலம் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். தங்கள் வைத்திருந்த பணத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வருமானம் இல்லாமல் குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை நம்பி வியாபரம் நடத்தி வந்த நிலையில் சுற்றுலாத்துறை முழுவதுமாக முடக்கப்பட்ட நிலையில் சாலையோரங்களில் வாசனை திரவியங்கள், ஹோம் மேட் சொக்லேட் மற்றும் குளிர் லங்களில் விற்கப்படும் ஜாக்கெட் போன்ற பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளின் நிலை பெரிய அளவில் நெருக்கடியை சந்தித்துள்ளது.

மூணாறில் முக்கிய சுற்றுலா தலங்களான மாட்டுப்பாட்டி பகுதியில் சாலையோர வியாபாரம் செய்து வந்த 80 குடும்பங்களும் எக்கோ பாயிண்ட், குண்டளை பகுதியில் வியாபாரம் செய்து வந்த 200க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் குடும்பங்களும் அடுத்த வேலை உணவு இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

கேரள அரசு இலவச அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கிட் போன்றவற்றை அளித்தும் அவைகள் ஒருவாரத்தில் தீர்ந்த நிலையில் தங்களின் வாழ்கை கேள்விக்குறியாக மாறியுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளன.ர். கொரோனா காலத்தில் பல நலத்திட்டங்களை அறிவிக்கும் அரசு தங்கள் வாழ்க்கைக்கும் ஒளி ஏற்ற முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: