இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு: வாகன அணிவகுப்பு நடத்தி டாக்டர்களை கவுரவப்படுத்திய அமெரிக்கா

*  7.90 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

திருமலை: உலகம் முழுவதும் கொரோனாவால், டாக்டர்கள் கடும் மன உளைச்சலுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்களை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவில் அரசு டாக்டர்கள் வீட்டிற்கு வாகனங்களுடன் சென்று அணிவகுப்பு செய்து கவுரவித்து வருகிறது. இதனை அங்கு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கைகள் தட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு அமெரிக்கா வாழ் இந்தியரான கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த உமா மதுசூதன் என்ற டாக்டர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்து வருகிறார்.

வாஷிங்டனில் உள்ள அவரது வீட்டின் முன் காவல் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அனைத்துத்துறை உயரதிகாரிகளின் வாகனங்களும் அணிவகுத்து சென்று உற்சாகப்படுத்தினர். இந்தியாவில் பல மருத்துவமனைகளில் கொரோனா வைரசால்  பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்களை தாக்கி வரக்கூடிய சம்பவமும் நடைபெற்று வருகிறது. சென்னையில் ஆந்திராவை சேர்ந்த டாக்டர் மற்றும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் அவர்கள் சடலத்தை புதைக்கவும், எரிக்கவும்  விடாமல் அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஊழியர்களை காயப்படுத்தி வருகின்றனர். கொரோனா சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்களை கவுரவப்படுத்தாவிட்டாலும், அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் வழங்குவதோடு  அரசு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என டாக்டர்கள் கூறி வருகின்றனர்.

Related Stories: