எதிர்கட்சிகள் கூறும் ஆலோசனைகளை புறந்தள்ளி அதிகார போதையில் பேசுவதா?: முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: எதிர்க்கட்சிகள் கூறும் ஆலோசனைகளை புறந்தள்ளி அதிகார போதையில் முதல்வர் நிதானம் இழந்து பேசுவதா என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சிகளுக்கு, குறிப்பாக எதிர்கட்சித் தலைவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என சீறிப் பாய்ந்துள்ளார். எதிர்கட்சிகள் கோவிட்-19 தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் செய்வதாக கற்பனையில் கட்டமைத்த குற்றச்சாட்டு கூறியுள்ளார். முதல்வரின் பேட்டி செய்திகளை ஏடுகளில் பார்த்த போது அவர் ‘நிதானத்தில் தான் இருக்கிறாரா?’ என்ற கேள்வி எழுகிறது.

நாடு முடக்கம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரண நிதி உள்ளிட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.ஜனநாயக அரசியல் அமைப்பில் எதிர் கட்சிகளும் உள்ளடங்கி இருப்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்து விட்டு, அதிகார போதையில் எடப்பாடியார் ‘நிதானம் இழந்து பேசுவது’ முதலமைச்சர் என்ற  மாண்பமைந்த பொறுப்புக்கு தீராக்களங்கம் ஏற்படுத்தும் செயலாகும். அவரது எதிர்மறை அணுகுமுறையை உடனடியாக கைவிட வேண்டும்.

Related Stories: