கிராம கோயில் பூசாரிகள் கொரோனா நிவாரணம் பெற விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்: கிராம கோயில் பூசாரிகள், கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் இயங்கும் கிராம கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவித் தொகை ₹1000 வழங்கப்பட உள்ளது. நிவாரண தொகை பூசாரிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதற்கு காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள கிராம கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் உடனடியாக தங்களது பெயர், செல்போன் அல்லது தொலைபேசிஎண், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், பூசாரி அடையாள அட்டை விவரம் ஆகியவற்றை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண் மூலமாகவோ அல்லது ackpm@tnhrce.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். இதுதொடர்பாக ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் வர தேவையில்லை. வாட்ஸ்அப் எண்கள்: காஞ்சிபுரம் - 9047705278, செங்கல்பட்டு- 8248831996, உத்திரமேரூர் - 9894028414, மதுராந்தகம் - (1) 8608340560, மதுராந்தகம் - (2) 9445213215, ஸ்ரீபெரும்புதூர் 9940243425

Related Stories: