புதுடெல்லி: வக்கீல் மனோகர் பிரதாப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு நிலவுவதால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். சிலர் வைரஸ் அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மன அழுத்த பிரச்னை அதிகரித்து வருகிறது. பசியால் வாடுவோருக்கு அரசு உணவு அளிக்கிறது. ஆனால், மன அழுத்தத்தை போக்க என்ன செய்தது?மன அழுத்தம் அதிகரிப்பதால், தனிமைபடுத்தப்பட்ட வார்டில் இருக்கும் சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. நல்ல மனநிலையுடன் இருப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
