ஊரடங்கை எப்ப முடிவுக்கு கொண்டு வருவீங்க... எந்நேரமும் ‘அந்த’ மூடுலேயே இருக்காரு... முடியல..! உருக்கமான வீடியோ வெளியிட்ட ஆப்பிரிக்க பெண்

கானா: ‘ஊரடங்கை எப்ப முடிவுக்கு கொண்டு வருவீங்க... எந்நேரமும் என் கணவர் ‘அந்த’ மூடுலேயே இருக்காரு... என்னால் முடியல..!’ என, உருக்கமான வீடியோவை ஆப்பிரிக்க பெண் வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. பொது மக்களின் வாழ்க்கை  ஸ்தம்பித்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வீட்டில் எந்த வேலையும் இல்லாத நிலையில், சில பெண்களின் கணவன்கள், குடும்ப சண்டையும், சிலர் குழந்தைகளுடன் சந்தேசமாகவும் காலத்தை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வேதனையை வெளிப்படுத்தி, ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோ இன்று உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் பேசியிருப்பதாவது:  கொரோனாவால் வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் நான், கவலையற்ற ஒரு சர்வாதிகாரியிடம் (கணவன்) மாட்டிக் கொண்டேன். ஊரடங்கு எப்போது முடியும்; கணவரை எப்போது வேலைக்கு அனுப்புவது என்பது தெரியவில்லை. அரசாங்கம் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், வீட்டில் உள்ள கணவர்களை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.

என் கணவர் எப்போதும் ‘செக்ஸ்’ மூடுலேயே இருக்கிறார். அவரது பாலியல் செய்கையால் நான் அடிக்கடி மயக்கமடைந்துவிடுகிறேன். அவர் தூங்குவதே இல்லை. வீட்டில் சமைத்து வைத்தால் நன்றாக சாப்பிடுவார். டிவி பார்ப்பார்; சிறிது நேரத்தில் மீண்டும் அவருக்கு செக்ஸ் தேவை ஏற்படுகிறது. ஊரடங்கால் எனது ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியவில்லை. என் கணவர் அடிக்கடி என்னுடன் பாலியல் உறவு கொள்வதன் மூலம் எனது உடல் மற்றும் மனநிலையை கெடுத்துவிட்டார். வேதனையுடன் மனமுடைந்த நிலையில் இருந்த நான், வீட்டிலிருந்து ஓடிவந்து, ஓரிடத்தில் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்துவிட்டேன்.

எனவே, அரசாங்கம் விரைவில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார்.  ஆப்பிரிக்க நாடான கானாவில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 30க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: