உணவு கிடைக்காததால் கடிக்கும் தெருநாய்கள்

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உணவு கிடைக்காமல் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் வழியில் போவோரை கடித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நேற்று மட்டும் 22 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இந்தூர் நகரில் நாய்கடிக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக, சராசரியாக நாளொன்றுக்கு 50 ஆக அதிகரித்துள்ளது.

நாய் கடித்தால் ஏற்படும் ரேபிஸ் நோயில் இருந்து அவர்களை பாதுகாக்க 28 நாட்களில் அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து ஊசி போட வேண்டியுள்ளது. நாய்கடி நோயாளிகளை கவனிப்பதற்கு என வேறு சில ஊழியர்களை பணியமர்த்த வேண்டி இருக்கிறது. ஊரடங்கினால் அவைகளுக்கு சரியான சாப்பாடு கிடைக்காமல் பட்டினியில், எரிச்சலில் முகக்கவசங்களுடன் செல்லும் மனிதர்களை சந்தேகத்துடன் விரட்டி சென்று தாக்குகிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: