சென்னை: 2009ம் ஆண்டு ‘டெல்லி 6’ என்ற இந்தி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்றிருந்த ‘‘மஸாக்கலி’’ என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான ‘மர்ஜாவான்’ ‘‘இந்தி படத்துக்காக ‘மஸாக்கலி’’ பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளனர். இதற்கு இன்னொருவர் இசை அமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த பாடல் கடும் எதிர்மறை விமர்சனத்தை சந்தித்தது. ‘200 பேர் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாடல் ‘மஸாக்கலி’. அது குறுக்குவழியில் தயாரானது அல்ல. ஒரிஜினல் பாடலையே கேளுங்கள்’’ என்று ஏ.ஆர்.ரஹ்மானும் டிவிட்டரில் கூறியிருந்தார்.