ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்பதே அரசின் முதல் கடமையாகும்: ப.சிதம்பரம் ட்விட்

சென்னை: ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டதாக ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏழை குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதே அரசின் முதல் கடமை, எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறித்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது என்று பதிவிட்டுள்ளார். உலகளவில் கொரோனாவால்  உயிரிழப்பானது 83 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 773 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-லிருந்து 738-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக ரேஷன் கார்டு உள்ள அனைவர்க்கும் ரூ.1000 என்ற முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த பணம் அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு நிலையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த பணம் சென்று அடையவில்லை.

இந்நிலையில் ஏழைக் குடும்பங்களின் கைகளில் அரசு பணத்தைச் சேர்க்க வேண்டும் என்பதே அரசின் முதல் கடமையாகும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது. அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும். எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது. இதனைச் செய்யாத வரை இந்த அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: