சென்னையில் கொரோனா பாதித்த 74 வயது மூதாட்டி டிஸ்சார்ஜ்: முதல் முறையாக படத்தை வெளியிட்டது சுகாதார துறை

சென்னை: சென்னையில் 74 வயது மூதாட்டி தொற்று உறுதியாகி தற்போது முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார். அதுதொடர்பாக முதல் முறையாக புகைபடத்தை சுகாதார துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-லிருந்து 738-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 5 பேர் உடல்நலம் சரியில்லமால் உள்ளனர். 5 பேரை தவிர மற்ற அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது.

Advertising
Advertising

மேலும் தமிழகத்தில் மொத்தம் 21 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார். அதில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆன மூதாட்டி 74 வயதானவர். சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள பொழிச்சூரைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த மாதம் 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடு அற்ற சர்க்கரை வியாதி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வீடு திரும்பிய மூதாட்டிக்கு மருத்துவர்கள் மலர்க்கொத்து மற்றும் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: